நன்மதிப்பு பெற்ற இவர்களின் இஸ்லாம் மீதான பார்வைகள்.
"இங்கு யார் கூறுகின்றனர்" என்பது முக்கியமற்றதொன்று. உணர்ச்சிகளுக்கு இடம் கொடாத ஆழமான ஆய்வையும் நடுநிலைத்தன்மையையும் உங்களுக்கு உணர்த்தவே அறிஞர்களை இங்கு நான் அடையாளப்படுத்த முனைகிறேன். மேலும்,
ஜார்ஜ் பெர்னார்ட் ஷா.
"நான் இஸ்லாத்தை மிக உயர்ந்த நிலையில் மதிக்கிறேன். ஏனெனில் இஸ்லாத்தில் வியக்கதக்க ஆற்றல்கள் இருக்கின்றன. கால மாற்றங்களை தன்னுள் இணைத்துக்கொள்ளும் ஆற்றலைப் பெற்றுள்ள, மேலும் ஒவ்வொரு யுகத்தின் மக்களையும் ஈர்க்கும் தன்மையை கொண்டுள்ள ஒரே மார்க்கம் இது ஒன்றுதான் என எனக்குத்தோன்றுகிறது. நான் இந்த அதிசய மனிதர் பற்றி படித்திருக்கிறேன் இவர் கிருஸ்துவுக்கு விரோதமானவரல்லர் என்பதே எனது கருத்து. முஹம்மதை மனிதகுல மீட்பாளர் என்றே கண்டிப்பாக அழைக்க வேண்டும். அவரைப்போன்ற மனிதர்கள் நவீன உலகின் சர்வாதிகாரியாக அமருவாரேயானால் இன்று தேவைப்படும் அமைதி மற்றும் மகிழ்வை அளித்திடும் வகையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் வெற்றி பெறுவார். இன்றைய ஐரோப்பா இதனை ஒப்புக்கொள்ள துவங்கியிருப்பதை போன்றே நாளைய ஐரோப்பாவும் முகம்மதின் மார்கத்தை ஏற்றுக்கொள்ளும் என முன்னறிவிப்புச் செய்கிறேன்."
சேர் சி. பி. இராமசாமி ஐயர்.
"இஸ்லாம் என்றால் என்ன? இன்றைக்கு உலகில் செயல்படும் ஒரே ஜனநாயக நெறி என்றே இஸ்லாத்தை நானும் மற்ற சிந்தனையாளர்களும் கருதுகிறோம். நான் ஓர் இந்து. இந்து சமய நம்பிக்கையில் ஆழ்ந்த பற்று கொண்டிருந்தாலும் நான் இதனை தைரியமாகவே கூறுகிறேன். மனித குலம் ஒன்றே என்பது இந்து மதத்தின் அடிப்படை தத்துவமாக இருந்தாலும் அதனை நடைமுறை படுத்துவதில் எனது சொந்த மதம் வெற்றி பெற வில்லை. இறைவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமே என்ற அடிப்படை சித்தாந்தத்தை நடைமுறை படுத்துவதில் இஸ்லாத்தின் செய்முறையை போன்று வேறேந்த மதமும் - அவற்றின் மத கருத்தோட்டம் எதுவாயினும் சரியே -கடைபிடிக்கவில்லை தென் ஆபிரிக்காவில் போயர் இன மக்கள் பிரச்சனை , அவுஸ்த்ரேலியா அல்லது தென் அமெரிக்க நாடுகள் அல்லது இங்கிலாந்தின் பல்வேறு தரப்பட்ட இனமக்களின் பிரச்சனைகள் போன்று இஸ்லாத்தில் எத்தகைய இனப்பிரச்சினைகளும் இருக்கவில்லை."
சுவாமி விவேகானந்தர்.
"மற்ற அனைத்து மக்களையும் விட அத்வைதக் கொள்கை தங்களுக்கு முன்னரே அறிமுகமாயிருப்பதற்கு இந்துக்கள் பெருமை அடையலாம். ஆயினும் அத்வைதம்- அதாவது மாந்தர்கள் அனைவரையும் தம்மை போல் சமமானவர் என்று பாவிப்பதும், அவ்வாறே நடந்து கொள்வதும் இந்துக்கள் மத்தியில் அறவே மலரவில்லை. ஆனால் இத்தகைய சமத்துவத்தை ஒரு மதம் பாராட்டத்தக்க வகையில் அனுகியிருக்கிறதேன்றால் அது இஸ்லாம் மட்டுமே என்று நான் அனுபவப்பூர்வமாய் கூறுகிறேன். நான் அழுத்தமாய் சொல்கிறேன், நடைமுறைக்கு இசைவான இந்த செயல்பாடின்றி வேதாந்த கருத்துக்கள் எவ்வளவுதான் சிறப்பானதாக, பெருமைக்குரியதாக இருந்தாலும் பரந்திருக்கும் மனித குலத்துக்கு அது பயனற்றதாகவே முடியும்."
இலெத்ரப் ஸ்டோர்டட்.
"இஸ்லாத்தின் எழுச்சி மனிதகுல வரலாற்றில் மிக வியக்கத்தக்க நிகழ்ச்சியாக விளங்குகிறது. மிகவும் பின் தங்கிய - அவல நிலையிலிருந்த ஒரு நாட்டைச்சேர்ந்த மக்களிடமிருந்து புறப்பட்ட இந்த எழுச்சி ஒரு நூற்றாண்டுக்குள்ளேயே உலகின் பாதி நிலபரப்பிற்கும் அதிகமாகப் பரவிவிட்டது.
எந்த அளவு நுணுக்கமாக இதன் வளர்ச்சியை நாம் ஆராய்கிறோமோ அந்த அளவுக்கு அசாதாரணமாய் அது நமக்கு தோன்றுகிறது. இதர பெரும் மதங்களின் நிலை என்ன? அவை மிக மெதுவாகவே பரவின. அதற்கும் கடும் போராட்டம் தேவைப்பட்டது. இறுதியில் வலிமை வாய்ந்த மன்னர்களின் துணை கொண்டே அவை வெற்றி பெற்றன. கான்ஸ்டான்டைன் துணை கொண்டுதான் கிறிஸ்தவ மதம் தழைத்தது. அசோகரின் துணை புத்த மதம் மேலோங்கியது.சைரசுக்குப் பிறகுதான் ஜெராஸ்ட்ரியனிசம் பெருகியது. ஒவ்வொருவரும் தாம் தேர்ந்தெடுத் துக்கொண்ட மத ஈடுபாட்டுக்காக ஆட்சியதிகாரத்தை அளித்தனர். ஆனால் இஸ்லாத்தின் நிலை அவ்வாறல்ல. வரலாற்றில் இதற்க்கு முன் எந்த சிறப்பும் பெற்றிராத நாடோடிகளாய் பாலைவனங்களில் சிதறி வாழ்ந்த மக்களிடையே அது தோன்றியது.மிகக் குறைவான ஆள்பலத்தை கொண்டிருந்த போதிலும் வலிமை மிகுந்த உலகாயத சக்திகளின் எதிர்ப்புகள் இருந்த்த போதிலும் அது மின்னல் வேகத்தில் பரவத்தொடங்கியது. வியக்கத்தக்க முறையில் அது வெற்றிகளை நிலை நாட்டியது. இரண்டு தலைமுறைக்குள்ளாகவே மத்திய ஆசிய பாலைவனத்திலிருந்து ஆபிரிக்க பாலைவனம் வரையிலும் , இமயத்திலிருந்து பயர்நீஸ் வரையிலும் அது பரவிவிட்டது."
மகாத்மா காந்தி.
"தென் ஆபிரிக்காவில் உள்ள ஐரோப்பியர்கள் இஸ்லாம் பரவிவிடும் என்று பயப்படுவதாக சிலர் கூறினார்கள். இஸ்லாம் ஸ்பெயினுக்கு நாகரிகத்தை கற்று தந்தது. மொரோக்கோவுக்கும் ஒளி தந்தது. உலகுக்கு சகோதரத்துவம் எனும் கொள்கையை போதித்தது. தென் ஆபிரிக்காவில் உள்ளவர்கள் வெள்ளை இனத்தாருடன் சம உரிமை கோரக்கூடும் என்பதால் தென் ஆபிரிக்காவில் உள்ள ஐரோப்பியர்கள் இஸ்லாத்தின் வருகைக்கு அஞ்சுகிறார்கள். அவர்கள் நன்றாக அஞ்சலாம் . சகோதரத்துவம் என்பது பாவம் என்றால், கருப்பு நிறத்தவர்களுடன் சமத்துவத்திற்காக அவர்கள் அஞ்சினால் அந்த அச்ச்த்திற்கு காரணம் உண்டுதான்."
சரோஜினி நாயுடு.
"இஸ்லாம் தோற்றுவித்த உன்னத மரபுகளில் ஒன்று நீதி மற்றும் நியாய உணர்வாகும். குர் ஆனை நான் ஆய்ந்து படித்த போது அது அறிவுறுத்திய புரட்சிகரமான கொள்கைகள், வெற்று ஞனமாக அல்லாமல் வாழ்வின் நடைமுறை போதனையாக-நடைமுறை வாழ்வுக்கு இசைவானதாக , முழு உலகுக்கும் பொருந்தக் கூடியதாக இருப்பதை கண்டேன்."
"அதிசய மனிதர் முகம்மத்(ஸல்)" வியப்புடன் நோக்கும் உலக பெரு மேதைகள்.
மகாத்மா காந்தி.
"மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல்கொண்டேன். (அதை படித்தறியும் போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத்தந்தது வாள் பலமல்ல என்று முன்னெப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மை பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர் பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணி காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சார பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல."
அல்போன்சு டி லாமார்ட்டின்.
"உயர்ந்த இலட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் "முகம்மத்" உடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாயதக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது. ஆனால் முகம்மத் போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை; அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார். வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களை பதித்தார். வெற்றியின் போது அவர் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத்தன்மை தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்ட அவரது உயர் விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் இல்லாமல் உலகபற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவரது முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடனான மெய்ஞ்ஞான உரையாடல்கள் அவரது மரணம், மரணத்திற்கு பின்னரும் அவர் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிட வில்லை. மாறாக, சமயக்கொள்கை ஒன்றை நிலை நாட்டிட அவருக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன."
எம் எச் ஹார்ட்.
"உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே.
இன்னும் அவர் ஒரு சிறந்த இராஜ தந்திரியாகவும் வணிகராகவும் தத்துவவியலாளராகவும் பேச்சாளராகவும் அரச தலைவராகவும் சீர்திருத்த வாதியாகவும் மற்றும் இராணுவத்தளபதியாகவும் கூட வெற்றியடந்துள்ளார்."
போஸ்வர்த் ஸ்மித்.
"அவர் ஒரே நேரத்தில் போப்பும் சீசரும் ஆவார்; ஆனால் அவர் போப்பின் பகட்டுகள் ஆடம்பரங்கள் எதுவுமில்லாத போப் ஆவார். சீசரின் பாதுகாப்பு படைகள் எதுவுமில்லாத சீசராவார். தயார் நிலையிலுள்ள இராணுவமோ நிலையான நிர்ணயமான வருமானமோ இல்லாமல் வெறும் இறைவனின் இசைவாணையை தெய்வீக அனுமதியை மட்டுமே துணையாக கொண்டு ஆட்சி புரிந்ததாக கூறிக்கொள்ளும் உரிமை மனித வரலாற்றில் எவராவது ஒருவருக்கு இருக்குமானால் அவர் முஹம்மத் ஸல் அவர்களேயாவார். ஏனெனில் ஆட்சி அதிகாரம செலுத்திட தேவையான கருவிகள் துணைச்சாதனங்கள் எதுவுமில்லாமலேயே அதிகாரங்கள் அனைத்தையும் அவர் பெற்றிருந்தார்."
வில்லியம் எம். வாட்.
"முஹம்மத்(ஸல்) அவர்கள் தமது கொள்கைகளுக்காக எல்லாவித சித்திரவதைகளையும் கொடுமைகளையும் சகித்துக்கொண்டு அவர்களைத் தமது தலைவராக கருதிய அவர்களின் தோழர்களுடைய உயர்ந்த ஒழுக்க பண்புகளும் அவர்கள் இறுதியில் நிகழ்த்திய சாதனையின் மகத்துவமும் இவையனைத்துமே அவர்களின் அடிப்படையான நேர்மையை நம்பகமான தன்மையை நன்கு எடுத்துரைக்கின்றன. அவர்களை ஏமாற்றுக்காரராகவும் மோசடிக்காரராகவும் கருதுவது இன்னும் பல பிரச்சனைகளையும் கேள்விகளையும் எழுப்புகிறதே தவிர பிரச்சனைகள் தீர்க்கக்கூடியதாக இல்லை. மேலும் உலக வரலாற்றில் மேற்குலகில் முஹம்மதைப்போல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர்கள் வேறெவருமில்லை"
எட்வர்ட் கிப்பன்.
"அவர் தமது மார்க்கத்தை பிரச்சாரம் செய்தது வியப்புக்குரியதல்ல. மாறாக என்றும் நீடித்து நிலைத்திருக்கும் பாங்குதான் வியப்புக்குரிய ஒன்றாகும். மக்கா நகரிலும் மதீனா நகரிலும் அவர் வடித்தளித்த இஸ்லாத்தின் அதே அசல் வடிவம் தூய்மை கெடாமல் மாற்றப்படாமல் திரிக்கப்படாமால் பன்னிரெண்டு நூற்றாண்டுகளாக நடந்தேறிய புரட்சிகள் பலவற்றிற்கு பிறகும் இன்று வரை இந்திய ஆபிரிக்க துருக்கிய பகுதிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. சமயத்தைக்குறித்து கற்பனை மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான கருத்தோட்டங்களிலிருந்து இஸ்லாமியர்கள் ஒதுங்கியே இருந்தனர். அவற்றை அடியோடு கிள்ளி எறிந்தும் விட்டார்கள்.
இறைவன் பற்றிய அறிவார்ந்த கருத்தோட்டத்தின் கருத்தோட்டத்தின் மதிப்பு கண்ணுக்கு புலப்படும் உயிரினங்கள் சிலைகள் மற்றும் சட்டங்களின் அளவுக்கு குறைக்கப்பட்டதில்லை. இறைத்தூதருக்கு அளிக்கப்பட்ட உயர் மதிப்புகள் மனிதர் அந்தஸ்த்தை தாண்டி உயர்த்தியதில்லை."
தோமஸ் கார்லைல்.
"சண்டையும், சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது தனி முயற்சியால் இணைத்து; ஒரு இருபது ஆண்டுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த; பலம் பொருந்திய சமூகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ?"
அன்னி பீசன்ட்.
"அரேபியாவின் இந்தத்தூதருடைய வாழ்க்கையையும் ஒழுக்கப் பண்புகளையும் தூய நடத்தைகளையும் படிப்பவர்கள் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அறிந்தவர்களுக்கு அந்த வல்லமை மிக்க மாபெரும் இறைத்தூதர்களில் ஒருவரான இறுதித்தூத ரை க் குறித்து உயர்வான எண்ணமே ஏற்படும் எனது இந்த நூலில் நான் பல ருக்கும் தெரிந்த பல விடயங்களையே சொல்லியிருக்கிறேன். என்றாலும் நானே அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை த் திரும்ப த்திரும்ப படிக்கும் ஒவ்வொரு முறையும் ஆற்றல் மிக்க அரபு போதகரின் மீது மதிப்பும் புதிய மரியாதை உணர்வும் ஏற்படுவதைக் காண்கிறேன்."
மேற்கத்திய அறிஞர்களை அதிசயிக்கச் செய்யும் அல்-குர்ஆன்.
G. மார்கோலத்.
"உலகத்திலுள்ள பெரும் மத கிரந்தங்களில் குர் ஆன் திண்ணமாக முக்கிய இடத்தை வகிக்கிறது. உலகில் புரட்சி சகாப்தத்தை தோற்றுவித்த இந்த கிரந்தங்களில் அது இளைய வயது கொண்டதாக இருந்த போதிலும் மக்களின் உள்ளங்களை மாற்றுவதிலும், பெரும் மக்கள் கூட்டத்தையே வியக்கத்தக்க முறையில் மாற்றியமைப்பதிலும், அதற்கு இணையான வேறு கிரந்தம் இல்லை. அது முற்றிலும் புதிய சிந்தனையை மக்கள் மத்தியில் தோற்றுவிக்கிறது . நவீன பண்பாட்டை உருவாக்குகிறது. அது முதலில் அரபிய பாலைவனத்தில் சிதறிக்கிடந்த மக்களை இலட்சியத்தை பேணும் குழுவாக ஒன்றினைத்தது. அவர்களை மக்களில் சிறந்தவர்களாய் மாற்றியது. ஐரோப்பிய மக்களும் கிழக்கத்திய மக்களும் இன்றைக்கும் மதிக்கும் அளவுக்கு சமய , அரசியல் அமைப்புக்களை அது தோற்றுவித்துள்ளது."
Dr.மாரிஸ் புகைல்.
"நான் மேலே கூறிவந்த (அவரது நூலில்) விபரங்கள் முஹம்மத் குர் ஆணைப் புனைந்தார் என்று கூறுவதை அடிப்படை யற்றது என தெளிவாக காட்டுகிறன. கல்வி அறிவில்லாத ஒருவர் திடீரென சிறந்த இலக்கிய நயம் வாய்ந்த ஒரு கிரந்தத்தின் இன்றைக்கும் அரபி இலக்கியத்தில் இணையற்று விளங்கும் ஒரு கிரந்தத்தின் ஆசிரியராய் ஆக முடியுமா? அது மட்டுமல்ல அந்த நூற்றாண்டில் வாழ்ந்த மனிதன் கற்பனை செய்தும் பார்த்திராத இன்றைய விஞ்சான வளர்ச்சியின் மகத்தான கண்டு பிடிப்புகளின் எதார்த்த நிலையை அன்றைக்கே அவரால் எப்படித்துல்லியமாக தெரிவிக்க முடிந்தது?"
Dr.F.ஸ்டெயின் காஸ்.
"அதனுடைய வலிமையை இலக்கிய நயம் மற்றும் முன் கூட்டியே வைத்த சில துலாக் கோள்களைக் கொண்டு பார்க்கக் கூடாது. மாறாக, அன்று அவருடன் வாழ்ந்த மக்கள் மீது அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது, அந்நாட்டு மக்களிடையே அது எத்தகைய மாற்றங்களை உருவாக்கியது என்பதைக்கொண்டே அதன் வலிமையை நாம் கணிக்க வேண்டும். கருத்துகளில் முற்றிலும் மாறுபட்ட பரஸ்பர பகைமை கொண்ட மக்களின் உள்ளங்களை அது தொட்டு அவர்களின் உணர்ச்சிகளை மாற்றி, ஓர் இணக்கமான சமூகமாக பிணைத்தது என்பது வரலாற்று உண்மையாகும். இந்த உண்மையே அது அளவற்ற இலக்கிய நயம் கொண்ட வேதம் என்பதை தெளிவாக்குகிறது. பண்பாடற்ற மக்களை மிகவும் நாகரிகம் வாய்ந்த சமுகமாக மாற்றி வரலாற்றின் வெற்றிச் சிகரத்திற்கு அவர்களை இட்டுச்சென்றிருப்பதிலிருந்தே அந்த வேதத்தின் மகிமையை நாம் உணரலாம்."
ஜெர்மனிய அறிஞர் கொய்தே.
"குர்ஆனை எத்தனை முறை பார்த்தாலும் அது முதலில் அன்னியமாக தெரிகிறது; பிறகு புதுமையாக தெரிகிறது; அடுத்து ஒரு தென்றல் போல் மனதை கவர்ந்து செல்கிறது; மதிப்பச்சத்தை ஏற்பத்த்துகிறது- அதனுடைய நடையழகு அதனுடைய கருத்துக்கு ஏற்ப கம்பீரமாகவும் வலுவானதாகவும், அச்சத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் அதன் மீது மதிப்புக் கொள்ளச்செய்வதாகவும் உள்ளது. இந்த நூல் இவ்வாறு காலங்காலமாக மக்கள் மீது தன் ஆதிக்கத்தைச் செலுத்தக் கூடியதாக இருக்கின்றது."
அறிஞர் ஆர்தர் ஜே. ஆர்பெர்ரி.
"குர்ஆனுடைய கருத்துகளை வெளிக்கொணர்வதில் முன்னோர்கள் செய்த முயற்சிகளை விட இன்னும் சிறப்பாக செய்ய நாடினேன். ஆனால் அரபி மொழியில் குர்ஆனில் இருக்கும் ஆழத்தையும் நேர்த்தியையும் மிக குறைவாகவே என்னால் கொண்டு வர முடிந்தது. மிகத்துல்லியமாக பின்னிப் பிணைந்து நிற்கும் ஓசைகளை நான் ஆழமாக கவனித்தேன். குர்ஆனில் இருக்கும் கருத்தழகுக்கு சற்றும் குறைந்ததல்ல அதன் இசை நயம் என்பதையுமுணர்ந்தேன். உலக இலக்கியங்களிலேயே குர்ஆனை இவை இணையற்ற ஒன்றாக விளங்கச்செய்கிறன. குர்ஆனின் இந்த வினோதமான அம்சம் அதற்கேயுரிய தனிப் பாணியாகும். பிறரால் முற்றிலும் கையாள முடியாத பாணியாக அது இருக்கிறது. அதனுடைய ஓசை நயமே மக்களின் கண்களை கசியச்செய்கிறது. உள்ளங்களைப் பரவசமடையச்செய்கிறது."
சேர் வில்லியம் மூர்.
குர் ஆன் இஸ்லாத்தின் மாபெரும் சாதனை யாகும் அதன் ஆதிக்கம் சமயம் ஒழுக்கம் வி ஞ்ஞானம் போன்ற அனைத்து துறைகளிலும் படர்ந்து நிற்கிறது. குர்-ஆன் அனைத்துக்கும் மேலானது என்று ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.
மிக மிக நுணுக்கமான ஆதாரங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது. தொடுப்புகளின் உள்ளே இவ்வாறான எண்ணற்ற மேதைகள் இஸ்லாத்தின் சிறப்புகளுக்காக கூறும் காரணங்களையும் காணலாம்.
இவ்வுலகில் நன்மதிப்பு பெற்ற இவர்களின் இஸ்லாம் மீதான பார்வைகள்.
Sir George Bernard Shaw
I have always held the religion of Muhammad in high estimation because of its wonderful vitality. It is the only religion which appears to me to possess that assimilating capacity to the changing phase of existence which can make itself appeal to every age. I have studied him - the wonderful man and in my opinion for from being an anti-Christ, he must be called the Saviour of Humanity. I believe that if a man like him were to assume the dictatorship of the modern world, he would succeed in solving its problems in a way that would bring it the much needed peace and happiness: I have prophesied about the faith of Muhammad that it would be acceptable to the Europe of tomorrow as it is beginning to be acceptable to the Europe of today.
George Bernard Shaw, THE GENUINE ISLAM, Vol. 1, No. 81936.01, - 02.
Sir C.P. Ramaswamy lyer
"What does Islam stand for? I regard and all thinking men regard Islam as the one and only democratic faith that is actually functioning in the world today. Being a Hindu, firmly entrenched in the Hindu Faith, I yet make bold to say so. My own religion has not succeeded, despite its fundamental philosophy, in implementing in practice the Oneness of Humanity. No other religion, whatever its theory may be, has brought into practice the essential idea of oneness of man before God as Islam has done. It is only in Islam that there can be no such problem as those presented by the Boers in the South Africa, as those prevalent in white Australia or in the Southern states of the United states of America or even in England among the several strata of society."
Sir C.P. Ramaswamy Iyer. - Eastern Times, 22nd December 1944.
Swami Vivekanandar
" The HINDUS may get the credit of arriving at it earlier than other races, yet practical Advaitism, Which looks upon and behaves to all mankind as one's own soul was never developed among the Hindus. On the other hand, my experience is that if ever any religion approached to this equality in an appreciable manner, it is Islam and Islam alone, I am firmly persuaded, therefore, that without the help of practical Islam, Theories of Vedantism, however fine and wonderful they may be, are entirely valueless to the vast mass of mankind...."
Lothrop Stoddard (Ph.D.)
"The closer we examine this development the more extraordinary does it appear. The other great religions won their way slowly, by painful struggle and finally triumphed with the aid of powerful monarchs converted to the new faith. Christianity had its Constantine, Buddhism its Asoka, and Zoroastrianism its Cyrus, each lending to his chosen cult the mighty force of secular authority. Not so Islam. Arising in a desert land sparsely inhabited by a nomad race previously undistinguished in human annals, Islam sallied forth on its great adventure with the slenderest human backing and against the heaviest material odds. Yet Islam triumphed with seemingly miraculous ease, and a couple of generations saw the Fiery Crescent borne victorious from the Pyrenees to the Himalayas and from the desert of Central Asia to the deserts of Central Africa."
Mahatma Gandhi
"Someone has said that Europeans in South Africa dread the advent of Islam - Islam that civilized Spain - Islam that took the torch of light to Morocco and preached to the world the Gospel of brotherhood. The Europeans of South Africa dread the advent of Islam, as they may claim, equality with the white races. They may well dread it. If brotherhood is a sin, If it is equality of coloured races that they dread, then their dread is well founded."
Sarojini Naidu
" Sense of justice is one of the most wonderful ideals of Islam, because as I read in the Qur'an I find those dynamic principles of life, not mystic but practical ethics for the daily conduct of life suited to the whole world."
Sarojini Naidu, Lectures on "The Ideals of Islam' see Speeches and Writings of
"அதிசய மனிதர் முகம்மத்(ஸல்)" வியப்புடன் நோக்கும் உலக பெரு மேதைகள்.
Mahatma Gandhi.
"I wanted to know the best of the life of one (Muhammad) who holds today an undisputed sway over the hearts of millions of mankind. I became more than ever convinced that it was not the sword that won a place for Islam in those days in the scheme of life. It was the rigid simplicity, the utter self-effacement of the Prophet the scrupulous regard for pledges, his intense devotion to his friends and followers, his intrepidity, his fearlessness, his absolute trust in God and in his own mission. These and not the sword carried everything before them and surmounted every obstacle."
Alphonse de Lamartine
"If greatness of purpose, smallness of means and astounding results are the three criteria of human genius, who could dare to compare any great man in modern history with Muhammad?...........
Michael H. Hart
"My choice of Muhammad to lead the list of the world's most influential persons may surprise some readers and may be questioned by others, but he was the only man in history who was supremely successful on both the religious and secular levels. Of humble origins, Muhammad founded and promulgated one of the world's great religions, and became an immensely effective political leader.
Also active as a diplomat, merchant, philosopher, orator, legislator, reformer, and military leader."
R. Bosworth Smith.
"Head of the State as well as the Church, he was Caesar and Pope in one; but, he was Pope without the Pope's pretensions, and Caesar without the legions of Caesar, without a standing army, without a bodyguard, without a police force, without a fixed revenue. If ever a man had the right to say that he ruled by a rightdivine, it was Muhammad, for he had all the powers without their supports. He cared not for the dressings of power. The simplicity of his private life was in keeping with his public life."
Prof.William Montgomery Watt
"His readiness to undergo persecutions for his beliefs, the high moral
character of the men who believed in him and looked up to him as leader,
and the greatness of his ultimate achievement - all argue his fundamental
integrity. To suppose Muhammad an impostor raises more problems than
it solves. Moreover, none of the great figures of history is so poorly
appreciated in the West as Muhammad"
Edward Gibbon.
"Muhammad (pbuh) was nothing more or less than a human being. But he was a man with a noble mission, which was to unite humanity on the worship of One and Only One God and to teach them the way to honest and upright living based on the commands of God. He always described himself as, "A Servant and Messenger of God," and so indeed every action of his proclaimed to be."
[[[Edward Gibbon-English historian and Member of Parliament.
Simon Ockley-He was educated at Queens' College, Cambridge, and graduated B.A. in 1697, MA. in 1701, and B.D. in 1710]]]
Thomas Carlyle.
"how one man single-handedly, could weld warring tribes and wandering Bedouins into a most powerful and civilized nation in less than two decades"
Annie Beesant.
"It is impossible for anyone who studies the life and character of the great Prophet of Arabia, who knows how he taught and how he lived, to feel anything but reverence for that mighty Prophet, one of the great messengers of the Supreme. And although in what I put to you I shall say many things which may be familiar to many, yet I myself feel whenever I re-read them, a new way of admiration, a new sense of reverence for that mighty Arabian teacher."
Prof. K. S. Ramakrishna Rao.
"The personality of Muhammad, it is most difficult to get into the whole truth of it. Only a glimpse of it I can catch. What a dramatic succession of picturesque scenes. There is Muhammad the Prophet. There is Muhammad the Warrior; Muhammad the Businessman; Muhammad the Statesman; Muhammad the Orator; Muhammad the Reformer; Muhammad the Refuge of Orphans; Muhammad the Protector of Slaves; Muhammad the Emancipator of Women; Muhammad the Judge; Muhammad the Saint. All in all these magnificent roles, in all these departments of human activities, he is alike a hero"
SLIDE SHOW VIEWING
மேற்கத்திய அறிஞர்களை அதிசயிக்கச் செய்யும் அல்-குர்ஆன்.
G Margoliouth
"The Koran admittedly occupies an important position among the great religious books of the world. Though the youngest of the epoch-making works belonging to this class of literature, it yields to hardly any in the wonderful effect which it has produced on large masses of men. It has created an all but new phase of human thought and a fresh type of character. It first transformed a number of heterogeneous desert tribes of the Arabian Peninsula into a nation of heroes, and then proceeded to create the vast politico-religious organisations of the “Muhammadan” world which are one of the great forces with which Europe and the East have to reckon today."
Dr. Maurice Bucaille
It is impossible that Muhammad, peace be upon him, authored the Quran. How could a man, from being illiterate, become the most important author, in terms of literary merits, in the whole of Arabic literature?
How could he then pronounce truths of a scientific nature that no other human-being could possibly have developed at that time, an all this without once making the slightest error in his pronouncement on the subject?
Dr Steingass
"A work, then, which calls forth so powerful and seemingly incompatible emotions even in the distant reader - distant as to time, and still more so as mental development - a work which not only conquers the repugnance which he may begin its perusal, but changes this adverse feeling into astonishment and admiration, such a work must be a wonderful production...
indeed and a problem of the highest interest to every thoughtful observer of the destinies of mankind."
Johann Wolfgang von Goethe
Speaking about the Quran, Goethe says, "It soon attracts, astounds, and in the end enforces our reverence... Its style, in accordance with its contents and aim is stern, grand - ever and always, truly sublime -
So, this book will go on exercising through all ages a most potent influence."
Arthur J. Arberry
"In making the present attempt to improve on the performance of my predecessors, and to produce something which might be accepted as echoing however faintly the sublime rhetoric of the Arabic Koran, I have been at pain to study the intricate and richly varied rhythms which - apart from the message itself - constitute the Koran's undeniable claim to rank amongst the greatest literary masterpieces of mankind..
This very characteristic feature - 'that inimitable symphony', as the believing Pickthall described his Holy Book, 'the very sounds of which move men to tears and ecstasy' has been almost totally ignored by previous translators; it is therefore not surprising that what they have wrought sounds dull and flat indeed in comparison with the splendidly decorated original.."
"The Koran Interpreted", London: Oxford University Press . 1964, page-x.]
Sir William Muir
"The Quran is the groundwork of Islam. Its authority is absolute in all matters of Religion, ethics and science, equally as in matters of religion.... The Quran is supreme and much of the tendency is so plain as to admit no question,even among contending sectaries."